LOADING...
இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 11, 2025
10:11 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 11, 2025) மூன்று மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியே மழைக்கான காரணமாகக் கூறப்படுகிறது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்: கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் நீலகிரி கன்னியாகுமரி தூத்துக்குடி எனினும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் IMD தெரிவித்துள்ளது.

வானிலை

சென்னையில் வானிலை

தலைநகர் சென்னையை பொறுத்தவரை, இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் நவம்பர் 14 முதல் 16-ம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், சில சமயம் 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.