LOADING...
இன்று உருவாகிறது சென்யார் புயல்: தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; சென்னைக்கு பாதிப்பா?
தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இன்று உருவாகிறது சென்யார் புயல்: தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; சென்னைக்கு பாதிப்பா?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 26, 2025
08:02 am

செய்தி முன்னோட்டம்

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலேஷியா மற்றும் மலாக்கா ஜலசந்தி அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த தாழ்வு மண்டலம் இன்று அல்லது நாளை (நவம்பர் 26 அல்லது 27) மேற்கு-வடமேற்கு திசையில் மேலும் வலுவடைந்து நகரக்கூடும். இது தவிர குமரிக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது இன்று வலுவடைந்து, தமிழகம் நோக்கி நகரக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுவடைந்து புயலாக உருவாகக்கூடும் எனக்கணிக்கப்பட்டுள்ளது.

மழை நிலவரம்

மழை நிலவரம் மற்றும் முன்னறிவிப்பு

தமிழகத்தின் தென் மற்றும் வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும், இன்றும், நாளையும் இடி, மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம். ஆகிய மாவட்டங்களிலும், நாளை தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 11 மாவட்டங்களில், நவம்பர் 29 முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்காக 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.