LOADING...
துபாய், அபுதாபி & ஷார்ஜாவில் மேகவெடிப்பு போன்ற மழைக்கு வாய்ப்பு என தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
இன்று (டிசம்பர் 18) இரவு முதல் துபாய் மற்றும் அபுதாபியில் மழை தொடங்கும்

துபாய், அபுதாபி & ஷார்ஜாவில் மேகவெடிப்பு போன்ற மழைக்கு வாய்ப்பு என தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Dec 18, 2025
08:15 am

செய்தி முன்னோட்டம்

வளைகுடா நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத கனமழை பெய்யக்கூடும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். சவூதி அரேபியாவில் தற்போது கனமழையை பொழிந்து வரும் வலுவான 'மேலடுக்கு மேலைக்காற்றுச் சுழற்சி' (Westerly Trough), தற்போது கிழக்கு நோக்கி நகர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்கு பகுதியை முழுமையாகச் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக துபாயின் சராசரி ஆண்டு மழையளவான 100 மி.மீ, இந்த இரண்டு நாட்களில் (டிசம்பர் 18, 19) கொட்டித் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (டிசம்பர் 18) இரவு முதல் துபாய் மற்றும் அபுதாபியில் மழை தொடங்கும். டிசம்பர் 19 அன்று மழை உச்சத்தை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

குளிர் அலை

தமிழகத்தில் குளிர் காலநிலை: டிசம்பர் 20-ல் சென்னைக்கு குளிர் இரவு

தமிழகத்தை பொறுத்தவரை, அடுத்த சில நாட்களுக்கு இதமான குளிர்காற்று வீசும் "குளு குளு" வானிலை நிலவப்போகிறது. நாளை முதல் தமிழகம் முழுவதும் குளிர் அதிகரிக்க தொடங்கும். வரும் டிசம்பர் 20-ம் தேதி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (KTCC) இந்த ஆண்டின் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. தமிழகம் ஒட்டுமொத்தமாக 10 - 15 மி.மீ பற்றாக்குறையுடன் இந்த பருவ மழை காலத்தை நிறைவு செய்ய உள்ளது என அவர் தெரிவித்தார். எனினும், அக்டோபர் மாதத்தில் பெய்த கனமழை மற்றும் தென்மேற்கு பருவமழையின் சாதகமான சூழலால், தமிழகத்தின் முக்கிய ஏரிகள் அனைத்தும் தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் வரும் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்பது ஆறுதல்.

Advertisement