LOADING...
தமிழக வானிலை அறிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நாளை 7 தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழக வானிலை அறிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 23, 2026
05:27 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் வளிமண்டல கீழடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, நாளை (ஜனவரி 24, 2026) தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் சில பகுதிகளில் நாளை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம்

தமிழகத்தில் குளிர் குறையுமா?

தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மழையின் தீவிரம் சற்றுக் குறைய வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாகப் பனிப்பொழிவு அதிகமாக இருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வளிமண்டல மாற்றத்தால் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. இருப்பினும், மழை பெய்யும் நேரங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement