
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை; 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது போல, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நாளை தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி, அதன் காரணமாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இது தமிழகம் நோக்கி மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளில் நகர வாய்ப்புள்ளததால், கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பல இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் மிதமான மழை எதிர்பார்க்கலாம்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#வானிலைUpdate | வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்..#SunNews | #WeatherUpdate | #ChennaiRains pic.twitter.com/Tm4JlLkxvb
— Sun News (@sunnewstamil) December 16, 2024
மழை
நாளை பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டுள்ளது
நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளதால் 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில், புதுச்சேரியில் நாளை மறுநாளில் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில், நாளை மறுநாளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்றும், நாளையும், சென்னையும் அதன் புறநகர் பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யலாம்.