LOADING...
மலாக்கா ஜலசந்தியில் சென்யார் புயல் உருவானது: தமிழகத்திற்கு பாதிப்பு உள்ளதா?
மலாக்கா ஜலசந்தியில் சென்யார் புயல் உருவானது

மலாக்கா ஜலசந்தியில் சென்யார் புயல் உருவானது: தமிழகத்திற்கு பாதிப்பு உள்ளதா?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 26, 2025
11:08 am

செய்தி முன்னோட்டம்

மலாக்கா ஜலசந்தி அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுவடைந்திருப்பதாகவும், அதேசமயம் குமரிக்கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இந்த சென்யார் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்குமா என்ற கேள்விக்கு தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் தனது பதிவில் பதிலளித்துள்ளார். அதன்படி, இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றும் எனினும், இலங்கை அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழை ஏற்படும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வானிலை நிலவரம்

தமிழகத்தில் மழை நிலவரம் 

குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகரக்கூடும். பின்னர் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் தென் மற்றும் வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் சில பகுதிகளில் டிசம்பர் 1-ஆம் தேதி வரை மிதமான மழை தொடரலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.