LOADING...
நவம்பர் 29ஆம் தேதி வட மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்': காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்க வாய்ப்பு
நவம்பர் 29ஆம் தேதி வட மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'

நவம்பர் 29ஆம் தேதி வட மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்': காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்க வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 27, 2025
08:25 am

செய்தி முன்னோட்டம்

குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது இன்று வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இந்த நிகழ்வு தொடர்ந்து சென்னை, வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதனால் நவம்பர் 29 ஆம் தேதி தமிழகத்தின் 29 வட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ரெட் அலெர்ட்

ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

IMD அறிவிப்பின்படி, நவம்பர் 29 ஆம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மன் தெரிவித்துள்ளதன்படி, "29 மற்றும் 30 ஆம் தேதிகளில் மழை பெய்யும் ஹாட்ஸ்பாட் மண்டலத்தில் விழும் நாகை முதல் சென்னை வரையிலான பகுதிகள் முக்கிய நாட்களாகும். வானிலை மெதுவாக இருந்தால், அதன் தாக்கம் டிசம்பர் 1 ஆம் தேதி வரை கூட நீட்டிக்கப்படலாம்."

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post