வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி உருவானது: 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதுடன், கேரள கடலோரப் பகுதியை அண்மிக்கும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் இதே போல வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக் கூடும். இதன் காரணமாக, 23ம் தேதி வரை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Twitter Post
10 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு
இந்தக் காரணங்களினால், அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்குத் திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து மழை பெய்ய வாய்ப்பு அதிகரிக்கும். அந்த வகையில், அடுத்த சில மணி நேரத்தில் நாகை, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.