
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை; தமிழகத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை மழை
செய்தி முன்னோட்டம்
முன்னரே தெரிவித்திருந்தது போல, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதன்படி, தெற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும்.
இதனால், தமிழகத்தில் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று முதல் ஏப்ரல் 12 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி நெருங்கும் நிலையில், கன்னியாகுமரி- சென்னை வரையிலான கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 10 வரை மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்கள், ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதிகளிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#வானிலைசெய்திகள் | தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!#SunNews | #WeatherUpdate | #TNRains pic.twitter.com/Vv3Ch79DAg
— Sun News (@sunnewstamil) April 7, 2025