Page Loader
வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி; 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி; 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Dec 10, 2024
08:48 am

செய்தி முன்னோட்டம்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெற வாய்ப்பு உள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, "தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. குறிப்பிட்ட சாதக சூழலினால், காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து, இன்று வலுவடைய வாய்ப்புள்ளது. இது நாளை தமிழ்நாடு மற்றும் இலங்கை கரையை அடையலாம்" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது எனவும் கடலோர மற்றும் உள் மாவட்டங்கள், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

மழை

உள்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

அந்த அறிவிப்பில், இன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், இதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு நாளை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 12 மற்றும் 13ம் தேதிகளிலும் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post