வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும்
நாளை, நவம்பர் 14 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், கூடுதலாக, அடுத்த இரண்டு நாட்களில், அதாவது நவம்பர் 16 ஆம் தேதி, இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில், மிதம் முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வரை தென் தமிழகத்தில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது
உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை
வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி #LowPressure | #Rain | #WeatherUpdate pic.twitter.com/exvBBGngQK— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) November 13, 2023