வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று கூறப்படுகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் அங்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
பின்னர், அது 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு மற்றும் இலங்கை கடலோரப் பகுதி நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது!#SunNews | #Depression | #WeatherUpdate pic.twitter.com/lH7QVzqSl3
— Sun News (@sunnewstamil) November 8, 2024
கனமழை
இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், தமிழ்நாட்டின் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய 12 மாவட்டங்களில் இன்று நவம்பர் 8 அன்றும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை, நவம்பர் 9 அன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை அளித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் நவம்பர் 12,13ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.