
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது; சென்னையிலும் மழை உண்டு!
செய்தி முன்னோட்டம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கே, இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
எனினும் அதன் வேகம் காரணமாக அது புயலாக மாறும் வாய்ப்பு தற்போது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலெர்ட்
7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டுள்ளது
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதற்காக 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளையும் மிக கனமழைக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, பெரம்பலூர், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#வானிலைசெய்திகள் | டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை!#SunNews | #TNRains pic.twitter.com/Bbjt6XLNSm
— Sun News (@sunnewstamil) December 11, 2024