Page Loader
வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் உருவாகிறது; தமிழகத்திற்கு பாதிப்பா?
அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாகிறது

வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் உருவாகிறது; தமிழகத்திற்கு பாதிப்பா?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 21, 2024
10:39 am

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, வடக்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும், மேலும் 48 மணி நேரத்தில் புயலாக மாறி மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என கூறப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு 'டானா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வரும், அக்டோபர் 24ஆம் தேதி மேற்குவங்கம் மற்றும் ஒடிசா கடற்கரையையொட்டி கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post