ரீமால் புயல்: 14 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் உருவான புயல்; தமிழகத்திற்கு பாதிப்பா?
வங்கக்கடலில் நேற்று முதல் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது. அது, அதே நிலையில் கரையை கடக்கும் என எதிர்பார்த்த நிலையில், அது மேலும் வலு பெற்று நாளை மறுநாள் காலை, மே 25 ஆம் தேதி, புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரீமால் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், 14 வருடங்கள் கழித்து மே மாதத்தில் உருவாகியுள்ளது. பொதுவாக கோடை காலத்தில் புயல் உருவாவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரீமால் புயல், வரும் மே 26-ம் தேதி மாலைக்குள் தீவிர புயலாக மாறி மேற்குவங்க பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமழை பெய்யக்கூடும்.
ரீமால் புயல்
#BREAKING || நாளை மறுநாள் வங்கக்கடலில் உருவாகிறது ரீமால் புயல் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் மே 26 ஆம் தேதி மாலை தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு ஓமன் நாடு பரிந்துரைப்படி புயலுக்கு 'ரீமால்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது வருகிற 26ஆம் தேதி மேற்குவங்க பகுதியில் கரையை கடக்கும்... pic.twitter.com/qFuTBewbw7— Thanthi TV (@ThanthiTV) May 23, 2024