Page Loader
ஃபெஞ்சல் புயல் எதிரொலி: திருவண்ணாமலையில் உருண்டு விழுந்த பாறைகள், மண்ணில் புதைந்த வீடுகள்
7 பேர் மண் சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: திருவண்ணாமலையில் உருண்டு விழுந்த பாறைகள், மண்ணில் புதைந்த வீடுகள்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 02, 2024
10:31 am

செய்தி முன்னோட்டம்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான "ஃபெஞ்சல்" புயல், கடந்த சனிக்கிழமை மாலை பாண்டிச்சேரி அருகே கரையை கடக்க துவங்கியது. அதன் பிறகு, நேற்று காலை 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புயல் தமிழக உள்மாவட்டங்கள் நோக்கி நகரத்துவங்கியது. இதனால் விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. அதில் குறிப்பாக திருவண்ணாமலையில், தொடர் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 7 பேர் மண் சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

மீட்புப் பணிகள்

மீட்புப் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்

மணல் சரிவில் சிக்கியவர்களை மீட்க விழுப்புரத்திலிருந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண் சரிவின் போது, சுமார் 40 டன் எடை கொண்ட 14 அடி உயரப் பாறை உருண்டு விழுந்தது எனவும் செய்திகள் கூறுகின்றன. விவரம் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என பலர் நேரில் சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மண் சரிவில், 6 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மோப்ப நாய்கள், மரம் அறுக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.