LOADING...
வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 31, 2025
12:03 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்துக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகி வருகின்றன. இதன் அறிகுறிகளாக, சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மாந்தா புயலாக வலுப்பெற்று, சென்னை, திருவள்ளூர் உட்பட வட தமிழக மாவட்டங்களில் மழையைப் பொழிவித்தது. இந்நிலையில், தற்போது அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் சனிக்கிழமை (நவம்பர் 1) ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடல்

அரபிக் கடலிலும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

வங்கக்கடலைப் போல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அரபிக்கடலிலும் புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிழக்குத் திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.