வலுக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை; தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
வங்காள விரிகுடா கடலில் தோன்றியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, கடலூர், எண்ணூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் யாரும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, ஆந்திராவிற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது, ஆந்திராவில் குறிப்பாக விஜயவாடா பகுதியில் பெய்த கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், இந்த ரெட் அலெர்ட் மக்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.