
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது
செய்தி முன்னோட்டம்
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உண்டான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அங்கேயே நிலைகொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 5-மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை அல்லது அதற்கு அடுத்தநாள், மேல் நோக்கி நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிஷா அருகே கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
#BREAKING || வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்
— Thanthi TV (@ThanthiTV) November 15, 2023
"மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்"
"தொடர்ந்து வடமேற்கு திசையில்… pic.twitter.com/uXGpET3KuG