LOADING...
தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 19, 2025
08:46 am

செய்தி முன்னோட்டம்

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகி மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, "இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்தடுத்த நாட்களில் வலுப்பெற்று, மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் வழியாக லட்சத்தீவை நோக்கி நகரும் என தெரிவித்துள்ளது.

மழை

மழைக்கான வாய்ப்பு

இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, நவம்பர் 16-ஆம் தேதி முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை தொடங்கியது. கடந்த இரண்டு நாடகளாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.