
நவம்பர் 23இல் வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: மீண்டும் உருவாகிறதா புயல் சூழல்?
செய்தி முன்னோட்டம்
சென்னை வானிலை ஆய்வு மையம், வரும் 23ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று அறிவித்துள்ளது.
இது தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் தீவிரமடைந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்றால், புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
எனினும், புயல் சின்னம் குறித்து அடுத்த சில நாட்களில் தான் தீர்மானிக்க முடியும் என்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவை இல்லை என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்திற்கு மழை வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JstIn | தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு வானிலை ஆய்வு மையம் கடிதம்.#SunNews | #TNRain | #WeatherUpdate https://t.co/3bbQTtDuhE pic.twitter.com/4mehhUXGZP
— Sun News (@sunnewstamil) November 19, 2024
மழை
தமிழகத்தில் மழை தொடரும் என அறிவிப்பு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள், நெல்லை, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்த நிலையில், இன்று நவம்பர் 19ஆம் தேதி, தமிழகத்தில் 10 மாவட்டங்களில், குறிப்பாக மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில், இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கணிக்கப்படுகிறது. புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்பதால், அந்த நாளில் நாகை மற்றும் அருகிலுள்ள கடற்பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.