LOADING...
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 16, 2025
04:33 pm

செய்தி முன்னோட்டம்

தென்மேற்குப் பருவமழை வியாழக்கிழமை (அக்டோபர் 16) நாடு முழுவதும் இருந்து விலகியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா மற்றும் தெற்கு கடலோர ஆந்திரா ஆகிய பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழை வியாழக்கிழமை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, வியாழக்கிழமை முதல் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி (திங்கட்கிழமை) வரை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தற்போதைய வானிலை நிலவரத்தின்படி, வரும் அக்டோபர் 24 ஆம் தேதி அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாழ்வுப் பகுதியானது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நெருங்கி, மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, அடுத்த சில நாட்களுக்கு மழைப்பொழிவு நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூததுக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.