தமிழ்நாட்டில் இரவு முழுதும் தொடர்ந்த மழை: இன்று எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
செய்தி முன்னோட்டம்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, பல மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்றும் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக இன்று காலை வரை அதிகபட்சமாக, சீர்காழியில் 13.6 செ.மீ., கொள்ளிடத்தில் 13.4 செ.மீ. மழை பெய்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
விடுமுறை
கனமழை காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், பரவலாக மழை பெய்திருந்தாலும், கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும் என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை! #SunNews | #Cuddalore | #SchoolLeave pic.twitter.com/6L4KPu3O5a
— Sun News (@sunnewstamil) November 13, 2024