LOADING...
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: IMD அறிவிப்பு
அக்டோபர் 5 வரை தமிழகத்தின் சில பகுதிகளில் மழை தொடரும்

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: IMD அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 30, 2025
08:18 am

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அலுவலகம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 4 செ.மீ மழை பதிவானது. அதையடுத்து, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, செருமுள்ளி, சேலம் மாவட்டம் ஏற்காடு, கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை உள்ளிட்ட பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

வானிலை

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்

வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதன் தாக்கமாக மத்திய வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அக்டோபர் 5 வரை தமிழகத்தின் சில பகுதிகளில் மழை தொடரும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.