LOADING...
வங்கக்கடலில் மே 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு: தமிழகத்தில் மழை பெய்யக்கூடும்
வங்கக்கடலில் மே 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு

வங்கக்கடலில் மே 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு: தமிழகத்தில் மழை பெய்யக்கூடும்

எழுதியவர் Venkatalakshmi V
May 23, 2025
08:03 am

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடல் பகுதியில் மே 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய கிழக்கு அரபிக்கடலில், கோவா மற்றும் தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அருகில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மே 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

மழை

தமிழகத்தில் மழை வாய்ப்பு

இதன் தாக்கமாக, தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 28ஆம் தேதிவரை லேசான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் இன்று முதல் 26ஆம் தேதி வரை சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.