தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், வங்கக்கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், தொடர்ச்சியாக புயலாக உருமாறவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு, இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களில் அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை உட்பட 14 மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.