Page Loader
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது; தமிழகத்தில் மழை தொடருமா?
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது; தமிழகத்தில் மழை தொடருமா?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 17, 2024
08:10 am

செய்தி முன்னோட்டம்

இந்த வார துவக்கத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்தது. எனினும் தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னையில் மழை பாதிப்புகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மேல் நோக்கு நகர்ந்து தற்போது மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழ்நாடு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

மழை

தமிழகத்தில் மழை தொடருமா?

இந்த நிலையில் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் பதிவிட்டதன் படி, காற்றழுத்த தாழ்வு பகுதி நெல்லூருக்கு அருகில் உள்ள நிலப்பகுதியை நோக்கி நகரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, KTCC (சென்னை) இன்று சூரியன் உச்சம் பெறும் எனவும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலத்தில் நகர்ந்திருப்பதாலும், அதன் தெற்கே சென்னை அமைந்திருப்பதால், மேற்குப் பக்கத்திலிருந்து (நிலம்) தற்காலிக காற்று வீசும், எனவே இன்று மாலை முதல் நாளை காலை வரை வேப்ப சலனம் மழை பெய்யக்கூடும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார். சென்னை, பாண்டி, விழுப்புரம், கடலூர், காரைக்கால், நாகையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை இடியுடன் கூடிய மழை, ஆங்காங்கே சாதாரண மழை பெய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post