
16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது!
செய்தி முன்னோட்டம்
கேரளாவில் பருவமழை துவங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு 8 நாட்கள் முன்னதாகவே தொடங்குவது கடந்த 16 ஆண்டுகளில் முதல்முறையாகும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் முன்னேறி வரும் பருவமழை அமைப்பு ஆகியவற்றின் கலவையால், கடந்த இரண்டு நாட்களாக கேரளாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து IMD வெளியிட்ட X பதிவில், "கடந்த 2009 ஆம் ஆண்டு, மே 23, அன்று கேரளாவில் முன்கூட்டியே பருவமழை பெய்யத் தொடங்கிய பிறகு, இதுவே சீக்கிரமாக கேரளாவில் பருவமழை தொடங்கும் தேதியாகும்" எனத்தெரிவித்துள்ளது.
விவரங்கள்
கடந்த அண்டை விட முன்கூட்டியே வரும் பருவமழை
1975ஆம் ஆண்டு தொடக்க தேதிகளைக் கருத்தில் கொண்டு, கேரளாவில் பருவமழை முன்னதாக தொடங்கியது 1990இல் தான்.
இது வழக்கமான தொடக்க தேதிக்கு 13 நாட்கள் முன்னதாகும்.
கடைசியாக 2009 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் பருவமழை இவ்வளவு சீக்கிரமாக மாநிலத்தில் வந்தது. அப்போது அது மே 23 அன்று மாநிலத்தை அடைந்தது.
மறுபுறம், தாமதமாகத் தொடங்கியதற்கான பதிவு 1972 ஆம் ஆண்டு ஆகும், அப்போது பருவமழை ஜூன் 18 ஆம் தேதி தாமதமாகத் தொடங்கியது.
கடந்த 25 ஆண்டுகளில், மிகவும் தாமதமான வருகை 2016 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது, அப்போது ஜூன் 9 அன்று பருவமழை கேரளாவில் நுழைந்தது.
வானிலை முன்னறிவிப்பு
தென் மாநிலங்களுக்கு முன்னறிவிப்பு
தென் மாநிலங்களில், கேரளா, கடலோர மற்றும் தெற்கு உட்புற கர்நாடகா, கொங்கண் மற்றும் கோவா ஆகிய இடங்களில் சனிக்கிழமை மிக அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
மே 29 வரை கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.