LOADING...
"வருமானம் பத்தலைங்க!": மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்த நடிகர் சுரேஷ் கோபி
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்த நடிகர் சுரேஷ் கோபி

"வருமானம் பத்தலைங்க!": மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்த நடிகர் சுரேஷ் கோபி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 13, 2025
09:01 am

செய்தி முன்னோட்டம்

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததோடு, பாஜகவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சி சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சரவையில் தனக்குப் பதிலாக நியமிக்க பரிந்துரைத்தார். சதானந்தன் கலந்து கொண்ட ஒரு விழாவில் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றிய கோபி, மூத்த தலைவரின் மாநிலங்களவை நியமனம் வடக்கு கண்ணூர் மாவட்ட அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கிறது என்றார். "என்னை நீக்கிய பிறகு சதானந்தன் மாஸ்டரை (மத்திய) அமைச்சராக்க வேண்டும் என்று நான் இங்கே மனதாரக் கூறுகிறேன். இது கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

பதவி

கேரளாவிலிருந்து தேர்வான MP சுரேஷ் கோபி

மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சராக உள்ளார் சுரேஷ் கோபி. நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவர், 2016 அக்டோபரில் தான் பாஜகவில் சேர்ந்ததாகவும், மாநிலத்தின் இளைய பாஜக உறுப்பினர்களில் ஒருவராகவும் இருப்பதாகவும் கூறினார். தேர்தலின் போது மக்கள் அளித்த தீர்ப்பை அங்கீகரிப்பதற்காக கட்சி அவரை மத்திய அமைச்சராக்கியிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். திரைப்பட வாழ்க்கையை விட்டுவிட்டு அமைச்சராக ஆன பின்னர் அவரது வருமானம் கணிசமாக குறைந்துள்ளது என்றும் அவர் வேடிக்கையாக கூறினார். கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த BJP மூத்த தலைவரான சதானந்தன் மாஸ்டர், அரசியல் வன்முறையில் இருந்து தப்பியவர். 1994ஆம் ஆண்டு சிபிஐ(எம்) தொண்டர்களால் நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலின் போது அவர் தனது இரண்டு கால்களையும் இழந்தார்.