LOADING...
ஈரான் எல்லை அருகே அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பல் வருகை; போர் பதற்றத்தால் உலக நாடுகள் கவலை
'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' போர் கப்பல் படைப்பிரிவை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்

ஈரான் எல்லை அருகே அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பல் வருகை; போர் பதற்றத்தால் உலக நாடுகள் கவலை

எழுதியவர் Venkatalakshmi V
Jan 27, 2026
11:13 am

செய்தி முன்னோட்டம்

ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களை அந்நாட்டு அரசு ஒடுக்கி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கடற்படையின் வலிமைமிக்க 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' போர் கப்பல் படைப்பிரிவை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளார். திங்கட்கிழமை இந்தப் படைப்பிரிவு அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்தது. ஈரானில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது ஈரான் ராணுவம் வன்முறையைப் பிரயோகித்தால், கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார். எந்நேரமும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் சர்வதேச அளவில் நிலவுகிறது.

எதிர்வினை

அமெரிக்காவின் ராணுவ பலமும், ஈரானின் எதிர்வினையும்

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலுடன், ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட மூன்று போர் கப்பல்களும் (USS Frank E. Petersen Jr, USS Spruance, USS Michael Murphy) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. அக்டோபர் மாதத்திற்கு பிறகு மத்திய கிழக்கு கடற்பகுதிக்கு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் வருவது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவின் இந்த நகர்வுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டின் மீது எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது மிகக் கடுமையான பதிலடியை சந்திக்கும் என ஈரான் தலைமை எச்சரித்துள்ளது. அதேசமயம், ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் அமெரிக்கா அதை ஏற்கும் என்றும், அதற்கான நிபந்தனைகள் ஈரானுக்குத் தெரியும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement