LOADING...
தவெக தலைவர் விஜய் வேலூர் கூட்டத்தில் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் கல்வித்துறை மாற்றங்கள்
விஜய் தனது அதிரடி திட்டங்களை வேலூர் கூட்டத்தில் அறிவித்துள்ளார்

தவெக தலைவர் விஜய் வேலூர் கூட்டத்தில் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் கல்வித்துறை மாற்றங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 23, 2026
03:35 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அதிரடி திட்டங்களை வேலூர் கூட்டத்தில் அறிவித்துள்ளார். விஜய், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள அக்ரம்சேரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பிரசார ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, தனது ஆட்சி அமைந்தால் செயல்படுத்தப்படவுள்ள முக்கியத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அவர் பட்டியலிட்டார். கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை முன்னிறுத்தும் இவரது வாக்குறுதிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஊழலற்ற நிர்வாகம் மற்றும் போதைப்பொருள் இல்லாத மாநிலத்தை உருவாக்குவதே தனது இலக்கு என அவர் சூளுரைத்துள்ளார்.

கல்வி

கல்வி மற்றும் பாடத்திட்டத்தில் மாற்றம்

அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் தரம் சர்வதேச அளவில் உயர்த்தப்படும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும். உயர்நிலைப் பள்ளி பாடத்திட்டங்களில் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைச் சட்டங்கள் கட்டாயமாகச் சேர்க்கப்படும். நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் சேருவதற்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

பாதுகாப்பு

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு

பெண் மற்றும் ஆண் குழந்தைகளின் பாதுகாப்பில் தவெக ஆட்சி நாட்டின் முதன்மை ஆட்சியாக இருக்கும். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களில் (SP) சரிபாதி (50%) இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான கதவுகளுடன் கூடிய கழிப்பறைகள் உறுதி செய்யப்படும்.

Advertisement

சுகாதாரம்

சுகாதாரம் மற்றும் கட்டமைப்பு

பேருந்து வசதி இல்லாத மலை கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும். அங்குள்ள கர்ப்பிணிப் பெண்களுக்காக நவீன அரசு சுகாதார மையங்கள் அமைக்கப்படும். ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுநர்களின் குடும்பங்களுக்காக தனி நல வாரியம் அமைக்கப்படும். தென் தமிழகம் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் புதிய தொழிற்சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

Advertisement

சமூக மாற்றம்

போதை இல்லாத தமிழகம்

தமிழகத்தில் போதைப் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் காலத்திற்கேற்ற புதிய திட்டங்கள் வகுக்கப்படும். இந்தக் கூட்டத்தில் சுமார் 4,900 நிர்வாகிகள் பங்கேற்றனர். "ஊழலையும், பொய் வாக்குறுதிகளையும் மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள்" என்று திமுக அரசை சாடிய விஜய், தனது கட்சி மாற்றத்திற்கான ஒரு கருவியாக இருக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement