LOADING...
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்தார் விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2025
01:11 pm

செய்தி முன்னோட்டம்

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 31 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தை ஒட்டி, கட்சியின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்டோருக்கான நிதியுதவியை அறிவித்துள்ளார். வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்தச் சோகத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்குத் தலா ரூ.2 லட்சம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (செப்டம்பர் 27) மாலை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் ஏற்பட்ட நெரிசல்தான் இவ்வளவு பெரிய உயிர் சேதத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.

இரங்கல்

விஜயின் இரங்கல் செய்தி

இந்தத் துயரச் சம்பவம் குறித்து அவர் தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவுசெய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது ஆறுதலையும் தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ. 5 லட்சம் அறிவித்திருந்த நிலையில், தற்போது தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ள இந்தத் கூடுதல் நிவாரணம், பாதிக்கப்பட்டோரின் துயரத்தைப் போக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக தவெக தலைவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

விஜய் இரங்கல் பதிவு