அஜித், விஜய் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? நடிகை தமன்னா பகிர்ந்த நெகிழ்ச்சியான நினைவுகள்
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா, அண்மையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது மாணவர்களிடையே உரையாடிய அவர், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். நடிகர் விஜய் குறித்து மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த தமன்னா, "விஜய் சார் மிகவும் எளிமையான மற்றும் மென்மையான மனிதர். நடனம் ஆடுவதில் அவரும், ஜூனியர் என்.டி.ஆரும் தான் எனக்குத் தெரிந்த சிறந்தவர்கள்" என்று பாராட்டிப் பேசினார். விஜயின் 50வது படமான 'சுறா' படத்தில் தமன்னா நாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அஜித்
அஜித் சமைத்துக் கொடுத்த இட்லி
அதேபோல் நடிகர் அஜித் குறித்த கேள்விக்கு, 'வீரம்' படப்பிடிப்பு நினைவுகளைத் தமன்னா பகிர்ந்துகொண்டார். "வீரம் படப்பிடிப்பின் போது அஜித் சார் தனது கேரவனில் வைத்து எனக்கு இட்லி செய்து கொடுத்தார். அவருக்குச் சமைப்பது என்றால் அவ்வளவு பிடிக்கும். அவர் மிகவும் நல்ல மனிதர் மற்றும் ஒரு சிறந்த குடும்பஸ்தர்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கல்லூரி திரைப்படத்தை நினைவு கூர்ந்த தமன்னா, மாணவ-மாணவிகள் தங்களது கல்லூரி வாழ்க்கையை முழுமையாக ரசித்து வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார். தற்போது தமன்னா, சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'புருஷன்' படத்தில் நடித்து வருகிறார்.