LOADING...
சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடத் தோன்றுவது ஏன்? அதிர்ச்சி தரும் உண்மையான காரணங்கள்
சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடத் தோன்றுவதற்கான காரணங்கள்

சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடத் தோன்றுவது ஏன்? அதிர்ச்சி தரும் உண்மையான காரணங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 15, 2026
04:57 pm

செய்தி முன்னோட்டம்

உணவு சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு துண்டு சாக்லேட் அல்லது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற தீராத ஆசை பலருக்கும் இருக்கும். இது தங்களது சுயக்கட்டுப்பாடு இல்லாததால் ஏற்படுவது என்று பலரும் தங்களைத் தாங்களே நொந்து கொள்கின்றனர். ஆனால், இது வெறும் மன உறுதி சார்ந்தது மட்டுமல்ல, இதற்குப் பின்னால் பல்வேறு உயிரியல் காரணங்கள் உள்ளன என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இனிப்பு ஆசைக்கு முக்கியக் காரணங்கள் பின்வருமாறு:-

#1

இரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கம்

நாம் உண்ணும் வெள்ளை ரொட்டி, இனிப்புகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளில் நார்ச்சத்தோ, புரோட்டீனோ இருப்பதில்லை. இவற்றைச் சாப்பிடும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு மிக வேகமாக உயர்ந்து (Insulin surge), பின்னர் அதே வேகத்தில் சட்டெனக் குறைகிறது. இந்த திடீர் சரிவு, உடலுக்கு உடனடி ஆற்றல் தேவை என்பதை உணர்த்தி மீண்டும் இனிப்பு சாப்பிடத் தூண்டுகிறது.

#2

ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் தூக்கமின்மை

மன அழுத்தத்தில் இருக்கும்போது உடல் சுரக்கும் ஹார்மோன்கள், அதிக ஆற்றல் கொண்ட இனிப்பு உணவுகளை நோக்கி நம்மைத் தள்ளுகின்றன. போதிய தூக்கம் இல்லாதபோது, பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் சமநிலை சீர்குலைந்து, அடுத்த நாள் அதிக இனிப்பு சாப்பிடத் தோன்றும்.

Advertisement

#3

மூளையின் 'ரிவார்டு' சிஸ்டம்

இனிப்பு உணவுகளைச் சாப்பிடும்போது மூளையில் 'டோபமைன்' (Dopamine) என்ற மகிழ்ச்சியைத் தரும் ரசாயனம் சுரக்கிறது. இதனால் சோர்வாகவோ அல்லது கவலையாகவோ இருக்கும்போது, ஒரு தற்காலிக நிம்மதிக்காக மூளை இனிப்பை எதிர்பார்க்கிறது.

Advertisement

கட்டுப்பாடு

இனிப்பு ஆசையைக் கட்டுப்படுத்துவது எப்படி?

உங்கள் உணவில் போதிய அளவு புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பதை உறுதி செய்யுங்கள். இவை செரிமானத்தை மெதுவாக்கி இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கும். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உண்பது உடலின் பசி உணர்வை முறைப்படுத்தும். 7 முதல் 8 மணி நேர ஆழ்ந்த உறக்கம் ஹார்மோன் சமநிலைக்கு மிக அவசியம். சில நேரங்களில் தாகத்தை உடல் பசி என்று தவறாகப் புரிந்து கொள்ளும். எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். இனிப்பை முழுமையாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், உங்கள் வாழ்க்கை முறையிலும் உணவு முறையிலும் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் இந்த 'சுகர் கிராவிங்' பிடியிலிருந்து நீங்கள் எளிதாகத் தப்பிக்கலாம்.

Advertisement