LOADING...
தமிழக தேர்தல் 2026: வெறும் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேனி வருசநாட்டின் சுவாரஸ்ய பின்னணி
வெறும் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி

தமிழக தேர்தல் 2026: வெறும் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேனி வருசநாட்டின் சுவாரஸ்ய பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Mar 15, 2026
07:21 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். அப்போது தமிழகத்தின் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்துப் பேசிய அவர், தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் உள்ள ஒரு தனித்துவமான வாக்குச்சாவடியைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். கூடுதல் விவரங்கள் இங்கே:-

வெள்ளி மலை

வெள்ளி மலை வாக்குச்சாவடி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வருசநாடு மலைப்பகுதியில் வெள்ளி மலை என்ற இடம் உள்ளது. இந்த மலைப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வெறும் 5 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த 5 பேர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக, தேர்தல் அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் பயணம் செய்து அந்த இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். ஒரு வாக்காளர் கூட விடுபடக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் இலக்கிற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

முக்கியத்துவம்

ஆண்டிப்பட்டி தொகுதியின் முக்கியத்துவம்

வருசநாடு அமைந்துள்ள ஆண்டிப்பட்டி தொகுதி தமிழக அரசியலில் மிக முக்கியமான நட்சத்திரத் தொகுதியாகும். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, எம்ஜிஆர் அவர்கள் ஒருமுறை பிரச்சாரத்திற்கே வராமல் இத்தொகுதியில் வெற்றி பெற்றது வரலாற்றுச் சாதனை. 2021 தேர்தலில் திமுகவின் ஏ.மகாராஜன் இங்கு வெற்றி பெற்றார். 2026 தேர்தலில் மீண்டும் ஒரு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement