+2 பொதுத் தேர்வு: கணக்குப் பதிவியலுக்கு (Accountancy) கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் +2 வகுப்பு (12th Standard) பொதுத் தேர்வில், கணக்குப் பதிவியல் (Accountancy) பாடத் தேர்வின்போது மாணவர்கள் கால்குலேட்டரைப் (Calculator) பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கணக்கு பதிவியலில் உள்ள நீண்ட கணக்கீடுகள் காரணமாக மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்கள் கணக்குகள் போடுவதை விட, பாடத்தின் கருத்தியல் புரிதல் மற்றும் பகுப்பாய்வில் அதிக கவனம் செலுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மாணவர்கள் அடிப்படை கால்குலேட்டர்களை (Basic/Non-Programmable) மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். அறிவியல் ரீதியான (Scientific) அல்லது புரோகிராம் செய்யக்கூடிய (Programmable) கால்குலேட்டர்களுக்கு அனுமதி இல்லை.
அட்டவணை
பொதுத் தேர்வு அட்டவணை
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகளை நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டார். பொதுத் தேர்வுகள் அட்டவணைப்படி, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2, 2026 தொடங்கி, மார்ச் 24, 2026 நிறைவு பெறும். 11-ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4, 2026 தொடங்கி மார்ச் 27 முடிவடைகிறது. அதேபோல, 10-ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 நிறைவு பெறும். முழுமையான அட்டவணையைத் dge.tn.gov.inல் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். அனைத்து தேர்வுகளும் காலை 10:00 மணிக்குத்தொடங்கி பகல் 1:15 மணி வரை நடைபெறும்.