LOADING...
கனமழை எதிரொலி: பூண்டி ஏரியில் நீர்திறப்பு அதிகரிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை!
கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கனமழை எதிரொலி: பூண்டி ஏரியில் நீர்திறப்பு அதிகரிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2025
11:43 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரித்து, உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று (அக். 16) முதற்கட்டமாக 700 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. நேற்று இரவும் கனமழை கொட்டித் தீர்த்ததால், ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக, பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 2,300 கன அடியில் இருந்து 4,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புழல் ஏரி

புழல் ஏரி நிலவரம்

அதேபோல, சென்னையின் மற்றொரு குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உபரி நீர் கால்வாய் அருகே தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏரி மற்றும் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கிடையே, IMD அறிக்கைபடி, வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள், கேரளா, உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் இன்று துவங்கக்கூடும். தமிழ்நாட்டில் இன்று பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் பெய்யக்கூடும்.