பொட்டல உணவுகளில் வெஜ்- நான் வெஜ் குறியீடு கட்டாயம் இருக்கவேண்டுமென தமிழக உணவு பாதுகாப்பு துறை உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் பொட்டலமிடப்பட்டு (packaged) விற்கப்படும் உணவுப் பொருட்களில், அது சைவ உணவா (Vegetarian) அல்லது அசைவ உணவா (Non-Vegetarian) என்பதை குறிக்கும் குறியீடு கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. உரிமம் பெற்ற பெரிய நிறுவனங்கள் முதல் சிறு தொழில் செய்வோர் வரை, உணவுப் பொருட்களை பொட்டலமிட்டு விற்கும் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோரின் பாதுகாப்பையும், உணவுத் தெரிவையும் உறுதி செய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்டாயம்
பொட்டலங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய 12 தகவல்கள்
பொட்டலமிடப்பட்ட உணவு பொருட்களில், அவை பதப்படுத்தப்படும் முறை முதல் நுகர்வோர் தொடர்பு கொள்ளும் எண் வரை, மொத்தம் 12 வகையான தகவல்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவை: 1. தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் மற்றும் பதிவு எண் 2. உணவின் பெயர் 3. உற்பத்தியாளர் பெயர், முழு முகவரி 4.தயாரித்த தேதி 5. நிகர எடை 6. காலாவதி தேதி 7. ஊட்டச்சத்து விவரம் 8. உணவுச் சேர்க்கைகளின் அறிவிப்பு மற்றும் அதன் அளவு. 9. எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது 10. உணவுப் பொருட்கள் Code மற்றும் பேட்ச் எண் 11. நுகர்வோர் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண் 12. சைவ மற்றும் அசைவ குறியீடு