ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கைரேகை பதியாவிட்டாலும் பொங்கல் பரிசு உண்டு
செய்தி முன்னோட்டம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கத் தொகை ஆகியவை ஜனவரி 8 முதல் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. இந்த பரிசை பெறும்போது பயோமெட்ரிக்(PoS) கருவியில் விரல் ரேகை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முதியவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள் சிலருக்கு விரல் ரேகை சரியாக பதிவாகாததால், பொங்கல் தொகுப்பைப் பெறுவதில் சிக்கல் நீடித்தது.
உத்தரவு
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உத்தரவு
பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுத் தமிழக அரசு தற்போது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, விரல் ரேகை பதிவாகாத பயனாளர்களுக்கு 'பொங்கல் பரிசு' வழங்கக் கருவிழி சரிபார்ப்பு (Iris Scanner) முறையைப் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டு எவ்வித சிரமமுமின்றிப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஏற்கனவே டோக்கன் பெற்றவர்கள் விரல் ரேகை, கருவிழிப் பதிவு அல்லது குடும்ப அட்டைதாரரைப் புகைப்படம் எடுத்தும் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.