LOADING...
இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.10,000; தமிழக அரசின் புதிய திட்டம்
தமிழகத்தில் இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.10,000

இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.10,000; தமிழக அரசின் புதிய திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 09, 2025
05:13 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக, மாநில அரசு அதிரடியாக மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி, முழுநேரமாகப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊக்கத்தொகை இந்த ஆண்டில் ரூ.4,000 லிருந்து ரூ.10,000 ஆகவும், பகுதி நேர மாணவர்களுக்கு ரூ.2,000 லிருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், தமிழகம் முழுவதும் மொத்தம் 18 பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

18 பள்ளிகள்

18 பயிற்சிப் பள்ளிகள்

மொத்தமுள்ள 18 பயிற்சிப் பள்ளிகளில் 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள், 6 ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள், 3 தவில் மற்றும் நாதஸ்வரப் பள்ளிகள், வேத ஆகமப் பாடசாலைகள் மற்றும் திவ்ய பிரபந்தப் பாடசாலை ஆகியவை அடங்கும். இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, உடை மற்றும் உறைவிடம் போன்ற அடிப்படை வசதிகளுடன் இந்த ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்து சமயக் கோட்பாடுகளைப் பின்பற்றும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 முதல் 24 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் ஓராண்டு காலச் சான்றிதழ் படிப்பான இந்தத் திட்டத்தில் சேரத் தகுதியுடையவர்கள். இந்தப் பயிற்சியில் சைவ-வைணவ ஆகமங்கள் மற்றும் தமிழ் முறைப்படிப் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.