LOADING...
தமிழக இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்
இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார் (pc: file photo)

தமிழக இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 17, 2026
09:10 am

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். தேர்தல் ஆண்டு என்பதால், மக்கள் கவரும் வகையிலான பல்வேறு அதிரடி அறிவிப்புகள் மற்றும் புதிய சலுகை திட்டங்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முக்கியத் தரவுகள் இதோ: தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19% ஆக உள்ளது. இது நாட்டின் சராசரி வளர்ச்சியை விட (7.4%) ஏறத்தாழ இரு மடங்கு அதிகமாகும். நாட்டின் மொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 15% பங்களிப்பை வழங்கி தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இது குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களை விட அதிகம்.

எதிர்பார்ப்புகள்

பட்ஜெட் 2026-இன் மீதான எதிர்பார்ப்புகள்

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கான சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படலாம். நிதியமைச்சரை தொடர்ந்து, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார். 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கான தொலைநோக்குத் திட்டங்கள் இதில் விரிவாக இடம்பெறக்கூடும். இந்த ஆண்டு ஆய்வறிக்கையில் பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பிற்கென தனி அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு உடனடி ஒப்புதல் அளிக்க பிப்ரவரி 23-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட உள்ளது.

Advertisement