2026 ஆம் ஆண்டில் எந்தெந்த நாட்களுக்கு பொது விடுமுறை? பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசு, 2026ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறையானது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றுக்குப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் அடுத்த ஆண்டு விடுமுறை நாட்களைத் தெரிந்து கொள்ள இந்த அறிவிப்பு வழிவகுத்துள்ளது.
விடுமுறை
முக்கிய விடுமுறை நாட்கள்
இந்த 24 விடுமுறை நாட்களில், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, குடியரசு தினம், மே தினம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய நாட்கள் அடங்கும். இதில், பொங்கல் பண்டிகை ஜனவரி 15 (வியாழன்) முதல் ஜனவரி 17 (சனி) வரை மூன்று நாட்களுக்குத் தொடர் விடுமுறையாக அமைந்துள்ளது. வங்கிகளின் வருடாந்திர கணக்கு முடிவிற்காக ஏப்ரல் 1ஆம் தேதி (புதன்) வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளிப் பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள 24 நாட்களின் முழுமையான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பட்டியல்
விடுமுறை நாட்களின் முழு பட்டியல்
01.01.2026-ஆங்கில புத்தாண்டு (வியாழன்) 15.01.2026-பொங்கல் (வியாழன்) 16.01.2026-திருவள்ளுவர் தினம் (வெள்ளி) 17.01.2026-உழவர் திருநாள் (சனி) 26.01.2026-குடியரசு தினம் (திங்கள்) 01.02.2026-தைப் பூசம் (ஞாயிறு) 19.03.2026-தெலுங்கு வருடப் பிறப்பு (வியாழன்) 21.03.2026-ரம்ஜான் (சனி) 31.03.2026-மகாவீர் ஜெயந்தி (செவ்வாய்) 01.04.2026-வங்கி வருடாந்திர கணக்கு நிறைவு (வங்கிகளுக்கு மட்டும் - புதன்) 03.04.2026-புனித வெள்ளி (வெள்ளி) 14.04.2026-தமிழ் வருடப்பிறப்பு/அம்பேத்கர் பிறந்த தினம் (செவ்வாய்) 01.05.2026-மே தினம் (வெள்ளி) 28.05.2026-பக்ரித் (வியாழன்) 26.06.2026-முகரம் (வெள்ளி) 15.08.2026-சுதந்திர தினம் (சனி) 26.08.2026-மிலாடி நபி (புதன்) 04.09.2026-கிருஷ்ண ஜெயந்தி (வெள்ளி) 14.09.2026-விநாயகர் சதுர்த்தி (திங்கள்) 02.10.2026-காந்தி ஜெயந்தி (வெள்ளி) 19.10.2026-ஆயுத பூஜை (திங்கள்) 20.10.2026-விஜயதசமி (செவ்வாய்) 08.11.2026-தீபாவளி (ஞாயிறு) 25.12.2026-கிறிஸ்துமஸ் (வெள்ளி)