LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 16) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 15, 2026
11:33 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- திருப்பூர் மாவட்டத்தில் இச்சிப்பட்டி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட சின்ன கோடாங்கி பாளையம், பெரிய கோடாங்கி பாளையம், பெத்தாம்புச்சி பாளையம், சிங்கப்பூர் நகர், ஏகாரன்பாயம் மற்றும் சின்னகோவில் பிரிவு ஆகிய பகுதிகளில் பரமாரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூர் மாவட்டத்தின் மேலும் பல துணைமின் நிலையங்களிலும் நாளை பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்யப்பட உள்ளது. அவை பின்வருமாறு:- பழைய கோட்டை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மருதுரை, முள்ளிபுரம், குட்டப் பாளையம் மற்றும் வடபழனி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. ஓலப் பாளையம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட திருப்பூர் சாலை, சிவன்மலை, கோவை சாலை மற்றும் சென்னிமலை சாலை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. காடையூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட சென்னிமலை பாளையம், அரசம் பாளையம், கோவில் பாளையம் மற்றும் கரூர் சாலை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

Advertisement