LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 20) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 19, 2026
10:26 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை, ஆலடிகுமுளை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரை மின்தடை அமலில் இருக்கும்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் தாழையூத்து துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட சி.கே.புதூர், பாப்பம்பட்டி, போடுபட்டி, கொழும்பங்கொண்டான், வயலூர், புஷ்பத்தூர், சாமிநாதபுரம், போடுபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தின் நாகுடி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட முழு நாகுடி பகுதி, ஆவுடையார்கோவில் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட முழு ஆவுடையார்கோவில் பகுதி மற்றும் வல்லவரி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட முழு வல்லவரி பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.

Advertisement