LOADING...
கரன்ட் பில் ஏறுதா? ஏசி குளிர்ச்சி குறையுதா? AC பராமரிக்க உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்
AC பராமரிக்க உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்

கரன்ட் பில் ஏறுதா? ஏசி குளிர்ச்சி குறையுதா? AC பராமரிக்க உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 26, 2026
12:39 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வீடுகளில் ஏசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏசியை முறையாக பராமரிக்காவிட்டால் குளிர்ச்சி குறைவதோடு, மின்சார கட்டணமும் எகிறும். கோடை காலத்திற்கு முன்பு ஆண்டுதோறும் செய்யப்படும் வழக்கமான ஏசி பராமரிப்பு, செயல்திறன், நீண்ட ஆயுளை உறுதி செய்வதற்கும், விலையுயர்ந்த பழுதுபார்ப்புகளைத் தடுப்பதற்கும் அவசியம். முக்கியமாக ஃபில்டர்களை சுத்தம் செய்தல் அல்லது மாற்றுதல், காயில்களை சுத்தம் செய்தல், உள்ளிட்ட சிக்கலான சுத்தம் செய்யும் பணிகளுக்கு தொழில்முறை சேவைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. எனினும் வீட்டில் நீங்களே சில டெக்னீக் பயன்படுத்தி AC-ஐ பராமரிக்கலாம்.

டிப்ஸ் #1

ஏசி பராமரிப்பு டிப்ஸ் #1

ஃபேனை தவிர்க்கவும்: ஏசி ஓடிக்கொண்டிருக்கும்போது மின்விசிறியை பயன்படுத்தாதீர்கள். ஏசியிலிருந்து வரும் குளிர்ந்த காற்று அறை முழுவதும் சீராக பரவ ஏசி மட்டுமே போதுமானது. இது ஏசி கம்ப்ரஸருக்கு ஏற்படும் கூடுதல் அழுத்தத்தைக் குறைக்கும். 2. ஃபில்டர் பராமரிப்பு: ஏசியின் உட்புறம் உள்ள ஏர் ஃபில்டர்களில் தூசி படிந்தால் குளிர்ந்த காற்று வெளியேறுவது தடைபடும். நீங்களே அந்த ஃபில்டர்களை கழற்றி சாதாரண தண்ணீரில் கழுவி, உலர வைத்து மீண்டும் பொருத்தலாம். இது ஏசியின் செயல்திறனை அதிகரிக்கும். 3. கம்ப்ரஸர் யூனிட்: வீட்டிற்கு வெளியே இருக்கும் கம்ப்ரஸர் யூனிட் (Outdoor Unit) நல்ல காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும். அதைச் சுற்றி குப்பைகளோ அல்லது காற்று செல்வதைத் தடுக்கும் அடைப்புகளோ இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

டிப்ஸ் #2

ஏசி பராமரிப்பு டிப்ஸ் #2

4. ஸ்லீப் மோட்: இரவு நேரங்களில் 'Sleep Mode' வசதியை பயன்படுத்துங்கள். இது அறையின் வெப்பநிலையை உணர்ந்து தானாகவே ஏசியின் வேகத்தைச் சரிசெய்யும். இதன் மூலம் கணிசமான மின்சாரத்தைச் சேமிக்க முடியும். 5. கேஸ் மற்றும் காயில் சுத்தம்: ஏசியில் கேஸ் (Refrigerant gas) அளவு சரியாக உள்ளதா என்பதைச் சோதித்துக் கொள்ளுங்கள். அதேபோல், ஏசியின் உட்புறக் கம்பிச்சுருள்களில் உள்ள அழுக்குகளை நீக்குவது மிக அவசியம். அழுக்கு படிந்த காயில்கள் அதிக மின்சாரத்தை உறிஞ்சும். இது தவிர கோடைக்காலம் உச்சத்தை எட்டுவதற்கு முன்பே, தகுதியான மெக்கானிக்கைக் கொண்டு ஒருமுறை முழுமையாக சர்வீஸ் செய்வது அவசியம். இது எதிர்பாராத பழுதுகளைத் தவிர்க்க உதவும்.

Advertisement