தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் மார்ச் மத்தியில் அறிவிப்பு, ஏப்ரலில் வாக்குப்பதிவு எனத்தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தேர்தல் தேதிகள் மார்ச் மாத மத்தியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டமன்றங்களின் பதவிக்காலம் முடிவடைவதை கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாதத்தில் பல்வேறு கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த முறையைப் போலவே தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும், அஸ்ஸாமில் இரு கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
வாக்காளர் பட்டியல்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தேர்தலுக்கான முதற்கட்டப் பணிகளான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்துள்ளன. புதுச்சேரி: பிப்ரவரி 14-ஆம் தேதியே இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. கேரளா: பிப்ரவரி 21 தமிழகம்: பிப்ரவரி 23 மேற்கு வங்காளம்: பிப்ரவரி 28 ஆகிய தேதிகளில் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது