பறவை காய்ச்சல்: செய்தி
"ஆஃப் பாயில் வேண்டவே வேண்டாம்!": பறவை காய்ச்சல் எதிரொலியாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய எச்சரிக்கை
சென்னை அடையாறு பகுதியில் உயிரிழந்த காகங்களை ஆய்வு செய்ததில், அவற்றுக்கு 'H5N1' வகை பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் பீதி; நாமக்கல் கோழிப் பண்ணைகளில் இரட்டிப்பாக்கப்பட்ட பாதுகாப்பு
தமிழகத்தின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் அறிகுறி மற்றும் பறவைகள் உயிரிழப்பு பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, தமிழக அரசு மாநிலம் தழுவிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சிக்கன், முட்டை சாப்பிடலாமா? வேண்டாமா? பறவைக் காய்ச்சல் பரவும் வேளையில் தமிழக சுகாதாரத்துறை அளித்துள்ள முக்கிய விளக்கம்
சென்னையின் சில பகுதிகளில் காகங்கள் அதிக அளவில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாகக் கருதி விலங்கு பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அதிரடி ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
சென்னையில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பீதி: என்ன அறிகுறிகள் வந்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்?
சென்னையில் சுமார் 1,500 காகங்கள் திடீரென உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் மீண்டும் பறவைக் காய்ச்சல் (Bird Flu) அச்சம் ஏற்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் பீதி; சென்னையில் உயிரிழந்த காகங்களில் H5N1 வைரஸ் உறுதி; கால்நடைத்துறை எச்சரிக்கை
சென்னை அடையாறு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் மர்மமான முறையில் உயிரிழந்த காகங்களின் உடல்களை ஆய்வு செய்ததில், அவற்றில் H5N1 வகை பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் வைரஸ் மட்டும் உருமாற்றம் அடைந்தால் கொரோனாவை விட ஆபத்து; பிரெஞ்சு நிறுவனம் எச்சரிக்கை
பறவைகள், கோழிகள் மற்றும் பாலூட்டிகளிடையே பரவி வரும் பறவைக் காய்ச்சல் வைரஸ், மனிதர்களுக்கு இடையில் பரவும் வகையில் உருமாற்றம் அடைந்தால், அது கொரோனாவை விட மோசமான பெருந்தொற்றாக மாறக்கூடும் என்று பிரான்சின் இன்ஸ்டிட்யூட் பாஸ்டர் சுவாச நோய்த் தொற்று மையத்தின் இயக்குநர் மாரி-ஆன் ராமெக்ஸ்-வெல்டி எச்சரித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட வனவிலங்குகள்: அண்டார்டிகாவை தாக்கிய கொடிய H5N1 வைரஸ்
சமீபத்திய ஆய்வில், H5N1 பறவை காய்ச்சல் வைரஸ் தற்போது அண்டார்டிகாவை அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
பறவைக் காய்ச்சல் காற்றின் மூலம் பரவுமா? எச்சரிக்கையாக இருங்க மக்களே
பறவைக் காய்ச்சல் தொடர்பாக இந்தியா புதுப்பிக்கப்பட்ட கவலைகளை எதிர்கொள்கிறது. வட மாநிலங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் இது அவ்வப்போது பரவுகிறது.
இந்தியாவில் பறவைக் காய்ச்சலால் மீண்டும் ஒரு மனிதருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தது WHO
இந்தியாவில் நான்கு வயது குழந்தைக்கு H9N2 வைரஸால் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மனித மரணம் மெக்சிகோவில் பதிவாகியுள்ளது
H5N2 பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மனித மரணத்தை உலக சுகாதார நிறுவனம் (WHO) உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர், மெக்ஸிகோ நகரத்தைச் சேர்ந்த 59 வயதுடையவர்.
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் அபாயம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்றுகள் மனிதர்கள் உட்பட மற்ற உயிரினங்களில் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு(WHO) இன்று மிகுந்த கவலையை வெளிப்படுத்தியது.
அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கான பென்குயின்கள் இறப்பு; பறவைக் காய்ச்சலா என சந்தேகம்
கடந்த பிப்ரவரியில் அண்டார்டிகாவின் முதல் H5N1 வழக்கு பதிவாகியுள்ளது.
உருகுவே கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2,000 பெங்குயின்கள்
கடந்த 10 நாட்களில், தென் அமெரிக்காவின் கிழக்கு உருகுவே கடற்கரையில் சுமார் 2,000 பெங்குயின்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு
பல காட்டுப் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பிரேசில் அரசாங்கம் ஆறு மாத சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.