Page Loader
உருகுவே கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2,000 பெங்குயின்கள்
கரை ஒதுங்கிய உடல்களில் பறவை காய்ச்சலுக்கான அறிகுறி இல்லை

உருகுவே கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2,000 பெங்குயின்கள்

எழுதியவர் Sindhuja SM
Jul 22, 2023
03:50 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 10 நாட்களில், தென் அமெரிக்காவின் கிழக்கு உருகுவே கடற்கரையில் சுமார் 2,000 பெங்குயின்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இந்த பறவைகள் பறவை காய்ச்சலால் இறக்கவில்லை என்றும், இது ஒரு மர்மமாகவே உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலில் உயிரிழந்த மாகெல்லானிக் பெங்குவின் இனத்தை சேர்ந்த குட்டிகள் உருகுவே கடற்கரையில் கரை ஒதுங்கியதாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விலங்கினங்கள் துறையின் தலைவர் கார்மென் லீசாகோயன் கூறியுள்ளார். "இவை தண்ணீரில் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த பெங்குயின்களிடம் தொண்ணூறு சதவீதம் கொழுப்பு இருப்புக்கள் இல்லை. மேலும், இவை வெற்று வயிற்றில் உயிரிழந்துள்ளன. பெரும்பாலும் இளம் குட்டிகளின் உடல்களே கரை ஒதுங்கி இருக்கிறது" என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜ்வ்

பறவை காய்ச்சலுக்கான அறிகுறி இல்லை

கரை ஒதுங்கிய உடல்களில் பறவை காய்ச்சலுக்கான அறிகுறி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மாகெல்லானிக் பெங்குவின் தெற்கு அர்ஜென்டினாவில் கூடு கட்டுகின்றன. தெற்கு அரைக்கோளத்தின் குளிர்காலத்தில், அவை உணவு மற்றும் வெப்பமான நீரைத் தேடி வடக்கே இடம்பெயர்ந்து, பிரேசிலிய மாநிலமான எஸ்பிரிடோ சாண்டோவின் கடற்கரையை அடைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இதனால் சில பெங்குயின்கள் இறப்பது இயல்பானதே. ஆனால், இவ்வளவு பெங்குயின்கள் இறப்பது மர்மாகவே உள்ளது என்றும் லீசாகோயன் கூறியுள்ளார். இது எதனால் நடக்கிறது என்பது தெரியவில்லை என்றாலும், அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் ஆகிய காரணங்களால் தான் பெங்குயின்கள் உயிரிழக்கின்றன என்கிறார்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.