Page Loader
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் அபாயம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் அபாயம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

எழுதியவர் Sindhuja SM
Apr 18, 2024
06:53 pm

செய்தி முன்னோட்டம்

பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்றுகள் மனிதர்கள் உட்பட மற்ற உயிரினங்களில் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு(WHO) இன்று மிகுந்த கவலையை வெளிப்படுத்தியது. "இது ஒரு மிகப்பெரிய கவலை என்று நான் நினைக்கிறேன்" என்று WHOஇன் தலைமை விஞ்ஞானி ஜெர்மி ஃபாரார் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கூறினார். 2020 இல் தொடங்கிய தற்போதைய பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலூட்டிகளின் பட்டியலில் பசுக்களும் ஆடுகளும் இணைந்துள்ள நிலையில், ஐ.நா சுகாதார நிறுவன அதிகாரி இதை "உலகளாவிய ஜூனோடிக் விலங்கு தொற்றுநோய்" என்று குறிப்பிட்டுள்ளார். இன்ஃப்ளூயன்ஸா A(H5N1) வைரஸ் மனிதர்களிடையே பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், விலங்குகளுடன் தொடர்பு கொண்ட மனிதர்களுக்கு பரவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதற்கு அதிக சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா 

889 பறவை காய்ச்சல் மனித வழக்குகள் பதிவாகியதாக ஐநா தகவல் 

"நிச்சயமாக பெரிய கவலை என்னவென்றால், வாத்துகள் மற்றும் கோழிகளுக்கு பரவி பின்னர் அதிகமாக இது பாலூட்டிகளை பாதிக்கக்க்கூடும். அந்த வைரஸ் இனி பரிணாம வளர்ச்சியடைந்து, மனிதர்களைப் பாதிக்கும் திறனை வளர்த்து கொண்டு, பின்னர் மனிதனிடமிருந்து மனிதனுக்குச் செல்லும் திறனை மேம்படுத்தக்கூடும்" என்று ஃபரார் கூறியுள்ளார். கடந்த 15 மாதங்களில், 889 பறவை காய்ச்சல் மனித வழக்குகள் பதிவாகியதாக ஐநா பதிவு செய்துள்ளது. அதில் 463 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இதன் இறப்பு விகிதம் 52 சதவீதமாக உள்ளது. அப்படியானால் இந்த நோயினால் பாதிக்கப்படும் 52 சதவீதம் பேர் உயிரிழக்கக்கூடும். சமீபத்திய ஆண்டுகளில் மில்லியன் கணக்கான காட்டுப் பறவைகளைக் கொன்ற பறவைக் காய்ச்சலின் திரிபு கடந்த சில ஆண்டுகளாக பாலூட்டிகளின் வரம்பில் கண்டறியப்பட்டுள்ளது.