இன்று சர்வதேச மலேரியா தினம் 2023: மலேரியாவுக்கு 5 பயனுள்ள வீட்டு வைத்தியங்கள்
ஆண்டுதோறும், ஏப்ரல் 25 அன்று உலகளவில் மலேரியா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நோயைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளை அங்கீகரிக்கவும் இந்த நாளை தேர்ந்தெடுத்துள்ளது மருத்துவ சமூகம். 2007இல், WHO-வின் உறுப்பு நாடுகளால் இந்த நாள் அங்கீகரிக்கப்பட்டது. கொசுவினால் பரவக்கூடிய இந்த மலேரியா காய்ச்சலை தடுக்க, சில தற்காப்பு வீட்டு வைத்தியங்கள் உண்டு. அவை: மஞ்சள்: ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிரம்பிய மஞ்சள், உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்றவும், மலேரியா ஒட்டுண்ணிகளை அழிக்கவும் உதவும். இது மலேரியாவுடன் தொடர்புடைய மூட்டு மற்றும் தசை வலியையும் குறைக்கும். தினமும் மஞ்சள் பால் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும் ஆரஞ்சு மற்றும் இஞ்சி
இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டையில், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிரம்பியுள்ளதால், அவை மலேரியாவின் அறிகுறிகளை சமாளிக்க உதவுகின்றன. இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மலேரியாவினால் ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலிக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன. அதோடு, இலவங்கப்பட்டையில் உள்ள சின்னமால்டிஹைட் எனப்படும் கரிம கலவை, வலி அறிகுறிகளைக் குறைக்கிறது. இஞ்சி: மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி வாந்தி வரும். இதை சமாளிக்க இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் உதவுகிறது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளுடன் நிரம்பி உள்ளதால், உடல் வலிகள் மற்றும் குமட்டலைக் குறைக்கும். துளசி தேநீர்: மலேரியாவை சமாளிக்க, எதிர்ப்பு பண்புகள் நிரம்பிய துளசி தேநீர் பருகிவர, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற மலேரியாவின் அறிகுறிகளை அகற்ற உதவுகிறது.